
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
முருக பெருமானின் அறுபடை வீடுகளுள், 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விண்ணைப்பிளக்கும் 'அரோகரா' கோஷத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
நவம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், யாக சாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளுதல், வீரவாள்வகுப்பு, வேல்வகுப்பு, சண்முகவிலாசம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறும்.
இறுதியாக, நவம்பர் 18 அன்று, இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும்.
இந்த பிரம்மாண்ட திருவிழாவில், பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள் என்று, கோவில் நிர்வாகத்தின் சார்பாக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா யாக சாலை பூஜையுடன் தொடங்கியது
— Oneindia Tamil (@thatsTamil) November 13, 2023
கந்த சஷ்டி விரதம் இருப்பதற்காக திருச்செந்தூரில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்
அதிகாலை முதலே திருச்செந்தூர் கடலில் நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்#Tiruchendur #MuruganTemple… pic.twitter.com/CPUT2s6sZP