
மதுரையில் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை திறந்து வைத்தார்
செய்தி முன்னோட்டம்
மதுரை மாவட்டம் புது நத்தம் பகுதியில் ரூ.215 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
2.61 ஏக்கரில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுரடி பரப்பளவில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் 18 கோடி ரூபாய் செலவில் புத்தகம் வைக்கும் அலமாரிகள், நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளது, ரூ.5 கோடி செலவில் கணினிகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து ரூ.60 கோடி செலவில் பல்வேறு துறைகளைச்சார்ந்த 2.5 லட்சப்புத்தகங்கள் இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது மிகப்பெரும் சிறப்பாகும்.
இந்நிலையில், 8 தளங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த இந்நூலகத்தினை இன்று(ஜூலை.,15)முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்று சற்றுமுன்னர் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கலைஞர் நூலகம் திறப்பு
#JUSTIN மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#KalaignarCentenaryLibrary #MKStalin #TNGovt #Madurai #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/ZlACTCbHEY
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 15, 2023