Page Loader
கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2024
03:48 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார். இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமின் பெயரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க ஜூலை மாதத்தில் கொலீஜியம் பரிந்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று, செப்டம்பர் 27 அவர் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நடைபெற்ற இந்த பதவி பிராமண நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரை முருகன், கே.என். நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜஸ்டிஸ் ஸ்ரீராம், மும்பை பல்கலைக்கழகத்திலும், லண்டனில் சட்டம் படித்துள்ளார் மற்றும் 1986-ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியினைத்தொடங்கினார்.

ட்விட்டர் அஞ்சல்

தலைமை நீதிபதி பதவியேற்பு