ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
செய்தி முன்னோட்டம்
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது தனக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு பெண் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
யாரோ ஒருவருடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது, தனது மகன் அழுததால் அந்தப் பெண் எரிச்சலடைந்ததாகக் கூறப்படுகிறது.
அப்சானா கத்தூன் என்ற பெண் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிஜாமுதீனை மணந்தார்.
மேலும், அந்த தம்பதியருக்கு நான்கு மற்றும் இரண்டு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், அப்சானாவுக்கும் அவரது கணவருக்கும் சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த கோபத்தில் அப்சானா தனது 2 வயது மகனுடன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டார்.
டுஜிவ்ன்
மறைந்த குழந்தையின் இறப்பு குறித்து தொடரும் விசாரணை
அப்போது, அவர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது, அவரது இளைய மகன் அழுததால் எரிச்சலடைந்த அப்சானா, அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து, அப்சானாவின் மாமனார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இதை மறுத்துள்ள அப்சானா, கோபத்தில் தள்ளிவிட்டதால் தனது மகன் இறந்துவிட்டான் என்றும் அது வேண்டும் என்றே செய்த காரியம் இல்லை என்றும் கூறியுள்ளார்,
அந்த சம்பவம் நடந்த பிறகு, , தூங்குவதற்காக அப்சானாவின் கணவன் அவரது அறைக்குள் சென்ற போது, 2 வயது குழந்தை உயிரற்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அப்சானாவை சிறையில் அடைந்துள்ள போலீஸார், இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.