Page Loader
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை

எழுதியவர் Nivetha P
Feb 24, 2023
12:43 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு, சசிகலா, அமமுக என தனித்தனி பிரிவுகளாக இவர்கள் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். அதன்படி, சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பிரம்மாண்ட கேக் வெட்டி எடப்பாடி பழனிச்சாமி கொண்டாடுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலை அலங்கரிக்கப்பட்டு அவரது திருவுருவ படத்திற்கு தமிழகஅரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அப்போது அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓபிஎஸ் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து, அங்கிருந்தோருக்கு இனிப்புகளை வழங்கினார்.

ட்விட்டர் அஞ்சல்

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை