கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கேரளா மாநிலத்தில் அதிகளவு பள்ளத்தாக்குகள், செங்குத்தான மலைப்பாதைகள் இருப்பதால் அங்கு விபத்து அதிகளவு நடக்கும். அதன்படி கேரளா வயநாடு, தாலபுழா என்னும் பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேன் அல்லது ஜீப்பில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.,25) மாலை 4 மணியளவில் 12 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று அங்கிருந்து சென்றுள்ளது. அந்த ஜீப் மணத்தவாடி பகுதியருகே சென்று கொண்டிருக்கையில் கொண்டையூசி வளைவில் திரும்புகையில் பாறை மீது மோதி நிலைத்தடுமாறி 25 மீ., ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.