LOADING...
வெளியானது JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகள்: வேத் லஹோட்டி என்பவர் 355 மதிப்பெண்களுடன் முதலிடம்  

வெளியானது JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகள்: வேத் லஹோட்டி என்பவர் 355 மதிப்பெண்களுடன் முதலிடம்  

எழுதியவர் Sindhuja SM
Jun 09, 2024
10:23 am

செய்தி முன்னோட்டம்

கூட்டு நுழைவுத் தேர்வின்(JEE) அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகளை ஐஐடி மெட்ராஸ், இன்று அறிவித்துள்ளது. JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளை இப்போது அந்த தேர்வின் இணையதளமான jeeadv.ac.in இல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில், ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த வேத் லஹோட்டி 360க்கு 355 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஐஐடி பாம்பே மண்டலத்தைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ்குமார் படேல் பெண் தேர்வர்களுள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். ஐஐடி JEE அட்வான்ஸ்டு முடிவுடன், பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐஐடி மெட்ராஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் JEE அட்வான்ஸ்டு இறுதி விடை தாள்களையும் வெளியிட்டுள்ளது.

இந்தியா 

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

JEE முதன்மைத் தேர்வில் முதல் 2.5 லட்சம் ரேங்க் எடுத்தவர்கள் மட்டுமே JEE அட்வான்ஸ்டு 2024க்குத் தகுதி பெற்றனர். இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் இருந்தன. இதற்கான தேர்வுகள் மூன்று மணி நேரம் நடைபெற்றன. JEE அட்வான்ஸ்டு 2024 முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம் 1. jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். 2. ஸ்கோர்கார்டு பதிவிறக்கும் இணைப்பைத் திறக்கவும். 3. கோரப்பட்ட உள்நுழைவு தகவலை வழங்கி, அந்த விவரங்களைச் சமர்ப்பிக்கவும். ] 4. தேர்வு முடிவுகள் அடுத்த பக்கத்தில் காட்டப்படும். ஆர்வமுள்ள கட்டிடக் கலைஞர்களுக்கு, ஆர்க்கிடெக்சர் ஆப்டிட்யூட் தேர்வு(AAT) 2024க்கான விண்ணப்ப பதிவு ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 10 ஆம் தேதி முடிவடையும்.