மஹாராஷ்டிராவில் புதிய 'பைக் ஆம்புலன்ஸ்' அறிமுகம்
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் தூரமாக இருக்கும் கிராம பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவையை வழங்கும் முயற்சியில் பைக் ஆம்புலன்ஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதை அறிமுகப்படுத்திய ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்(ITDP) திட்ட அலுவலர் ஷுபம் குப்தா, "கட்சிரோலியில் உள்ள 122 கிராமங்கள், மழைக்காலங்களில் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அதனால், தற்போது தார் சாலைகள் இல்லாத கிராமங்களுக்கு பைக் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்." என்று கூறி இருக்கிறார். "பைக் ஆம்புலன்ஸ்களில் பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அடிப்படை மருந்துகளுடன் கூடிய மருத்துவக் கருவிகள் இருக்கும். இது தவிர முதலுதவி பெட்டி மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டரும் இருக்கும். நோயாளியை பைக் ஆம்புலன்ஸின் பக்கவாட்டில் இணைக்கப்பட்ட படுக்கையில் ஏற்றிச் செல்லலாம்." என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.