ஆட்டோ எக்ஸ்போ 2023 பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விவரங்கள்
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், இந்தியாவின் மோட்டார் ஆட்டோ எக்ஸ்போ, கோவிட் பெருந்தொற்றிற்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போ பற்றி சில முக்கிய தகவல்கள் இதோ: ஆட்டோ எக்ஸ்போ, ஜனவரி 11-18 வரை, கிரேட்டர் நொய்டாவில்(உ.பி) உள்ள, இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடைபெறும். வார நாட்களில், காலை 11 மணி- இரவு 7 மணி வரையிலும், வார இறுதி நாட்களில், காலை 11 மணி-இரவு 8 மணி வரையிலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும். எக்ஸ்போவிற்கான டிக்கெட் விலை, ஜனவரி 13க்கு ரூ.750, ஜனவரி 14 &15க்கு ரூ.475. பின் வரும் நாட்களுக்கு, ரூ.350. ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இந்த எக்ஸ்போவிற்கான டிக்கெட்-ஐ ஆன்லைனிலும் வாங்கலாம்.
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் பங்குபெரும் கார் உற்பத்தியாளர்கள் யார்?
ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் ஏராளமான கார் உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர். மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கியா இந்தியா, டொயோட்டா. டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் இந்தியா, போன்ற முன்னணி தயாரிப்பாளர்கள் பங்கு பெற போகிறார்கள். மேலும் இந்த எக்ஸ்போவில், மாருதி சுஸுகி ஜிம்னி 5-டோர், மாருதியின் கான்செப்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் ஐயோனிக் 5, ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட், கியா கார்னிவல், கியா இவி9 கான்செப்ட், என பல பிரபலமான, எதிர்பார்ப்பை தூண்டும் அறிமுகங்களும் உண்டு. இருப்பினும், பல இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணித்துள்ளனர் என்றும், எனினும் கண்காட்சியில் ஏராளமான EV பிளேயர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.