
அமைச்சர் ஏ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை
செய்தி முன்னோட்டம்
தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஏ.வ.வேலு. இவர் மீது வரி ஏய்ப்பு புகார் பெறப்பட்டதன் காரணமாக, அவரின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல், வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை, திருவண்ணாமலை உட்பட 40 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் அமைச்சர் ஏ.வ. வேலுவிற்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பிரபலமான பில்டர்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ஆகிய நிறுவனங்களிலும் தற்போது சோதனை நடைபெறுவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
ஐடி ரெய்டு
#BREAKING | அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை#SunNews | #ITRaid | #EVVelu pic.twitter.com/nvvP9GuGeC
— Sun News (@sunnewstamil) November 3, 2023
ட்விட்டர் அஞ்சல்
ஐடி ரெய்டு
#JUSTIN | காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது#SunNews | #Chennai | #ITRaid
— Sun News (@sunnewstamil) November 3, 2023