ஜோஷிமத் நகரம் மூழ்குகிறது: இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்கள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத் நகரத்தின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் டிசம்பர் 27, 2022 முதல் ஜனவரி 8, 2023 வரையிலான 12 நாட்களுக்குள் ஜோஷிமத் நகரம் எப்படி 5.4 சென்டிமீட்டர் மூழ்கி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை 9 சென்டிமீட்டர் மூழ்கி இருந்த இந்த பகுதி, தற்போது 12 நாட்களுக்குள் 5.4 சென்டிமீட்டர் மூழ்கி இருக்கிறது. ஆகவே, முன்பைவிட தற்போது மூழ்கும் வேகம் மற்றும் விகிதம் அதிகரித்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. மலை பகுதியாக இருப்பதாலும், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காரணிகளாலும் இந்த நகரம் தற்போது மூழ்கி வருகிறது.