2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது
2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர சதி செய்ததாக 75 க்கும் மேற்பட்டவர்கள் மீது நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் PFIஐ சேர்ந்த 58 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பை சேர்நத இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்ட, PFI தலைவர்கள்/பணியாளர்கள் மீது செப்டம்பர் 2022 இல் பதிவு செய்யப்பட்டதாகும்.
கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் PFI இயக்கத்தினர் அதிகம் பேர் உள்ளனர்
இரண்டாவது குற்றப்பத்திரிகை ஐந்து பேருக்கு எதிராக, 2022 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 2022 இல் தெலுங்கானா காவல்துறையிடம் இருந்து விசாரணையை எடுத்துக் கொண்ட NIA, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. PFI இயக்கத்தினர் அதிகம் உள்ள கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று(மார் 17) மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற இறுதி நோக்கத்துடன் செயல்பட்டு, இதற்கான நிதி திரட்டலில் ஈடுபட்டதால் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.