அதிகாரப்பூர்வ பதிவுகளில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி வரலாறு படைத்தார் திருநம்பியான IRS அதிகாரி
செய்தி முன்னோட்டம்
திருநம்பியான IRS அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வ பதிவுகளில் தன் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி வரலாறு படைத்துள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் அவரது பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது.
அனுஷ்யா என்ற பெயரை கொண்ட அந்த அதிகாரி, எம் அனுகதிர் சூர்யா என்று தனது பெயரை மாற்றியுள்ளார்.
எம் அனுகதிர் சூர்யா, தற்போது ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்(செஸ்டாட்) தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இந்தியா
வரலாறு படைத்தார் சென்னையை சேர்ந்த அனுகதிர் சூர்யா
"எம் அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனிமேல், அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் அந்த அதிகாரி 'திரு எம் அனுகதிர் சூர்யா' என்று அங்கீகரிக்கப்படுவார்." என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, திரு சூர்யா டிசம்பர் 2013இல் சென்னையில் உதவி ஆணையராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2018 இல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். மேலும், அவர் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் இணை ஆணையராக பணியாற்ற தொடங்கினார்.
சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த அவர், 2023 இல் போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழகத்தில் சைபர் லா மற்றும் சைபர் தடயவியல் துறையில் பிஜி டிப்ளமோ முடித்தார்.