தீபாவளி பண்டிகையில் இந்தியாவின் பிரபல சமய தலங்களுக்கு செல்ல IRCTCயின் சிறப்பு ஏற்பாடு
தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்க 'கங்கா ஸ்நானம்' சிறப்பு ரயில் யாத்திரையை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து வரும் அக்டோபர் 28ஆம் தேதி புறப்படும் இந்த தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை, தீபாவளி நாளில் காசியில் கங்கா ஸ்நானம் செய்து, பின்னர் பிரயாக்ராஜ் மற்றும் கயா ஆகிய இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை ஆகிய வழியாக 'சேது சூப்பர் பாஸ்ட்' விரைவு ரயிலில் இந்த சுற்றுலா நடத்தப்படுகிறது. 9 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு கட்டணம் 29,420 ரூபாய் ஆகும்.
நேபாளத்திற்கும் ட்ரெயின் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்திய ரயில்வே மேலும், நேபாளத்தில் உள்ள முக்திநாத், வாராஹி, பிந்துவாஷி கோவில்கள், மகேஷ்வர் குகை மற்றும் டேவிஸ் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம்ம் வரும் நவம்பர் 11 ஆம் தேதி ராமநாதபுரத்தில் துவங்குகிறது. ராமேஸ்வரம் - அயோத்தி விரைவு ரயிலில் அயோத்தி சென்று, அங்கிருந்து 'ஏசி' பஸ்சில் பயணிகள் அழைத்துக் செல்லப்படுவர். 13 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு கட்டணம் 49,070 ரூபாய் ஆகும். மேலும், தகவலுக்கு 82879 31964, 82879 31977 என்ற எண்ணுகளில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.