ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள்
முத்துலட்சுமி ரெட்டி: முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் மருத்துவர்களில் ஒருவராவர். மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்று அவருக்கு பல பெயர்கள் இருக்கிறது. ஜூலை 30, 1886 இல் பிறந்த இவர், ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் காரணமாக இன்றும் அழியாது நம் மனதில் நிற்கிறார். ஆண்கள் கல்லூரியில் முதல் மாணவியாக அனுமதிக்கப்பட்ட முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆவார். இலாப நோக்கற்ற அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 80,000க்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு இந்த நிறுவனம் சிகிச்சை அளித்து வருகிறது.
தமிழகத்தில் பிறந்த பெண்களின் சாதனைகள்
மூவலூர் ராமாமிர்தம் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டவர்களில் ராமாமிர்தம் மிக முக்கியமானவர் ஆவார். இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் ஆர்வலர் ஆவார். வி.எம்.கோதைநாயகி அம்மாள் வை.மு.கோ, தமிழ் இதழான ஜெகன்மோகினியின் முதல் பெண் ஆசிரியர் ஆவார். எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியராக, இவர் 115 புத்தகங்களை எழுதியுள்ளார். ரோஷினி நாடார் HCL டெக்னாலஜிஸின் தலைமை அதிகாரி ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, பட்டியலிடப்பட்ட IT நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார். இந்திரா நூயி இந்திரா நூயி 2019 வரை பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். இவர் அந்த நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உயர் பதவியில் இருந்தார்.