Page Loader
மோடி கூறிய 5-Tக்கு பதில் 5-c தான் ஆட்சியில் நடக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மோடி கூறிய 5-Tக்கு பதில் 5-c தான் ஆட்சியில் நடக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மோடி கூறிய 5-Tக்கு பதில் 5-c தான் ஆட்சியில் நடக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

எழுதியவர் Nivetha P
Sep 23, 2023
11:30 am

செய்தி முன்னோட்டம்

'இந்தியாவுக்காக பேசுவோம்' பாட்காஸ்ட் அத்தியாயம் 2ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக அரசினை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழக மக்கள் மீண்டும் பாஜக'விடம் ஏமாந்துவிட கூடாது என்பதற்காகவே இந்த பாட்காஸ்ட் சீரிஸை நான் துவங்கினேன். 2014ம் ஆண்டு தேர்தலின் பொழுது, 'எனக்கு 60 மாதம் கொடுங்கள். நான் இந்தியாவை வளர்ச்சியடைய செய்கிறேன்' என்று மக்களிடம் கூறினார். ஆனால் மக்கள் கூடுதலாகவே மேலுமொரு 60 மாதங்கள் அவகாசம் கொடுத்தனர். இந்தியாவை வளர்ச்சியடைய செய்தாரா?அவர் எந்தவிதத்தில் இந்தியாவை வளர்த்துள்ளார் என்று பட்டியலிட முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

திட்டம் 

அயோத்தியா திட்டத்திலும் பாஜக ஊழல் - மு.க.ஸ்டாலின் 

தொடர்ந்து, மோடி முதல்முறை ஆட்சிக்கு வந்த பொழுது, இந்தியாவில் Talent, Trading, Tradition, Tourism, Technology உள்ளிட்ட 5T தான் முக்கியம் என்று கூறினார். ஆனால் அவரது ஆட்சியில், Cheating, Communalism, Character Assasination, Corporate Capitalism, Corruption உள்ளிட்ட 5C தான் நடக்கிறது. அயோத்தியா திட்டத்திலும் பாஜக ஊழல் செய்திருப்பதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. அடுத்ததாக அவர்கள் அறிவித்த உதான் திட்டம், ஏழைகளும் விமானத்தில் பயணம் செய்யலாம் என்று கூறி 2016ம் ஆண்டில் துவங்கப்பட்ட திட்டம் இது. இதற்காக 1.089கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 774 வழித்தடங்களில் விமானசேவை துவங்குவதாக கூறினர். ஆனால் இவற்றுள் வெறும் 7%தான் விமானசேவை செயல்பாட்டில் உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

மு.க.ஸ்டாலினின் வைரல் வீடியோ