இந்த காலகட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் இந்தியர்கள்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்திலும், இந்தியாவில் ஆண் குழந்தைக்கே ஆசைப்படுகிறார்கள் என்று ஓர் ஆராய்ச்சி முடிவு வெளியாகியுள்ளது.
இந்திய கொள்கை முகமையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆராய்ச்சியின் கட்டுரையில், வயதான பெற்றோர், தங்கள் ஆண்பிள்ளைகள் பொருளாதார ரீதியில் உதவி செய்வர் என்னும் எண்ணத்தினை போக்கும் வகையில், பொது ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பொதுவிவகாரத்துறை மற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியரான சீமாஜெயச்சந்திரன், பள்ளிகளில் பெண்குழந்தைகளுக்கு அடிப்படைச்சேவைகள் கிடைக்கிறதா என்பதனை உறுதி செய்யவேண்டும் என்றும்,
இந்திய குடும்பங்களில், மகளை விட மகனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மாறியுள்ளதே தவிர இன்னமும் மறையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆண்பிள்ளைகளுக்கு செய்யப்படும் முதலீடு, பெண்பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் மாறுபட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆண் பிள்ளை
கொள்கைகளில் மாற்றம் செய்து ஆண்பிள்ளை மோகத்தை போக்குவது என்பது மிகப்பெரிய சவால்
மேலும் அவர், ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளை பிறந்தவுடன், அடுத்து ஆண்பிள்ளை வேண்டுமென்று அந்த தாய் உடனே கருவுருவதால், முன்னதாக பிறந்த பெண் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கிடைக்காமல் போவது உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
மத்திய அரசு தனது கொள்கைகளில் மாற்றம் செய்து, இந்த ஆண்பிள்ளை மேலுள்ள மோகத்தினை போக்குவது என்பது மிகப்பெரிய சவால் என்றும் கூறியுள்ளார்.
பெண்கள் திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றுவிடுவார்கள், ஆண்பிள்ளை என்றால் முதுமையில் தங்களை பார்த்துக்கொள்வார்கள் என்னும் சமுதாயக்கட்டமைப்பும், பெண்பிள்ளை வீட்டில் பெற்றோர் இருப்பது மரியாதைக்குறைவு போன்ற கட்டமைப்புகளில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், மகன் தான் பெற்றோரை பார்த்து கொள்வான் என்னும் பொதுவான கண்ணோட்டம் தான், இந்தியர்கள் ஆண்பிள்ளை வேண்டுமென ஆசைப்படுவதற்கு அடிப்படைக்காரணம்.