
கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார்
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதியான திரெளபதி முர்மு அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் ஒரு நாள் பயணமாக அவர் கேரளாவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு இன்று(மார்ச்.,18) புறப்பட்டு வந்துள்ளார்.
இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2வது முறையாக திரெளபதி முர்மு தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். அதன்படி தமிழக மாநில கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள திரெளபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து வரவேற்றார். ஆளுநருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் இணைந்து வரவேற்றனர்.
காரில் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்
விவேகானந்தா கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிப்பாடு
இதனையடுத்து கன்னியாகுமரியில் இன்று(மார்ச்.,18) பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக்கத்திற்கு செல்லும் ஜனாதிபதி தனி படகு மூலம் கடலுக்குள் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று பார்வையிட்டு ரசித்துள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து திருவள்ளுவர் சிலையினையும் அவர் பார்வையிடுகிறார்.
தொடர்ந்து, விவேகானந்தா கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிப்பாடு செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் திரெளபதி முர்மு அவர்கள் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு சாலை மார்க்கமாக காரில் செல்லவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.