NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி20 மாநாடு - ஜனாதிபதி தலைமையிலான விருந்து குறித்த விவரங்கள் 
    ஜி20 மாநாடு - ஜனாதிபதி தலைமையிலான விருந்து குறித்த விவரங்கள் 
    இந்தியா

    ஜி20 மாநாடு - ஜனாதிபதி தலைமையிலான விருந்து குறித்த விவரங்கள் 

    எழுதியவர் Nivetha P
    September 08, 2023 | 02:51 pm 0 நிமிட வாசிப்பு
    ஜி20 மாநாடு - ஜனாதிபதி தலைமையிலான விருந்து குறித்த விவரங்கள் 
    ஜி20 மாநாடு - ஜனாதிபதி தலைமையிலான விருந்து குறித்த விவரங்கள்

    இந்தியா தலைமையில் இந்தாண்டு ஜி20 அமைப்பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகிறது. 18வது ஜி20 மாநாடு டெல்லியில் வரும் செப்.,9, 10 தேதிகளில் நடக்கவுள்ளது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கு வருகைத்தரும் சர்வதேசத்தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தானது டெல்லி பிரகதி மைதானம், பாரத் மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதற்கான விருந்தினர் அழைப்பு பட்டியலில், நாட்டின் அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், இந்திய அரசாங்கத்தின் அனைத்து செயலாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது. அதன்படி முன்னாள் பிரதமர்கள் டாக்டர். மன்மோகன் சிங் மற்றும் தேவ கவுடாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    விருந்தினை தொடர்ந்து ஒரு சிறு கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு

    இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் நடக்கும் இந்த விருந்தில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை என்பதனை அவரது அலுவலக தகவல்கள் உறுதிசெய்துள்ளது. அதேபோல் தேவ கவுடாவும் உடல்நிலை குறைபாடு காரணமாக இந்த விருந்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்த விருந்திற்கு அழைக்கப்படாத காரணத்தினால் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது. மேலும், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனிடையே, இந்த விருந்தினை தொடர்ந்து ஒரு சிறு கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இந்த உச்சிமாநாட்டின் செயல்பாடுகள் அனைத்துமே, ஜி20 சிறப்பு செயலாளரான முக்தேஷ் பர்தேஷியின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ஜனாதிபதி
    சோனியா காந்தி
    ராகுல் காந்தி

    இந்தியா

    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  மு.க ஸ்டாலின்
    ஜி20 உச்சி மாநாடு - 500 வகை உணவுகள் தயாரிக்க ஏற்பாடுகள் தீவிரம் ஜி20 மாநாடு
    உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு  பிரதமர் மோடி
    இந்தியா - பாரத்: ஐநா சபை ஓப்புதல் எவ்வாறு பெறப்படும்? பாரத்

    ஜனாதிபதி

    ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர் ஆசிரியர்கள் தினம்
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு

    சோனியா காந்தி

    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி காங்கிரஸ்
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி  காங்கிரஸ்
    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை மணிப்பூர்

    ராகுல் காந்தி

    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்
    மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம் காங்கிரஸ்
    2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா? காங்கிரஸ்
    ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ  லடாக்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023