NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை
    கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்துகளால் பல குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து தற்போது இந்திய கண் மருந்துகள் சர்ச்சையில் சிக்கியுள்ளது

    சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 03, 2023
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் அமெரிக்க சந்தைகளில் இருந்து கண் மருந்துகளைத் திரும்ப பெற்றுள்ளது. இந்த கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் தயாரித்த EzriCare என்ற கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) பரிசோதித்து வருகிறது.

    அதே நேரத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(FDA), குளோபல் பார்மாவின் மருந்துகள் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா

    இந்திய இருமல் மருந்துகளை அடுத்து இந்திய கண் மருந்துகளால் சர்ச்சை

    "EzriCare செயற்கைக் கண்ணீர் மற்றும் டெல்சம் பார்மாவின் செயற்கைக் கண்ணீர் சொட்டு மருந்துகள் பாக்டீரியாவால் மாசடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது எனபதால் இந்த மருந்துகளை வாங்க வேண்டாம் என்று FDA நுகர்வோரையும் சுகாதாரப் பயிற்சியாளர்களையும் எச்சரிக்கிறது. அசுத்தமான செயற்கைக் கண்ணீரைப் பயன்படுத்துவது கண் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும். இதனால், நிரந்தர பார்வை இழப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்." என்று FDA தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, குளோபல் பார்மா, அமெரிக்க சந்தைகளில் இருக்கும் அதன் கண் மருந்துகளை தானாக முன் வந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

    இந்த மருந்துகளால், இதுவரை அமெரிக்காவில் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 11 பேர் பார்வை இழந்துள்ளனர் என்றும் 1 உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் CDC தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    சென்னை

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    இந்தியா

    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது விமானம்
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு இந்தியா
    chatgpt போலவே பயன்படும் முக்கியமான 5 AI நுண்ணறிவு தளங்கள் சாட்ஜிபிடி
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    சென்னை

    ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி வாகனத்தில், சென்னையின் பங்கு தொழில்நுட்பம்
    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது சேமிப்பு டிப்ஸ்
    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தமிழ்நாடு
    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025