Page Loader
இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார்
இந்திய கடலோர காவல்படையின் 25வது டைரக்டர் ஜெனரலாக பால் நியமிக்கப்பட்டார்

இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2024
07:38 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மாரடைப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வரவிருக்கும் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து INS அடையாரில் ஆலோசித்து கொண்டிருந்தபோது, ராகேஷ் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக அவர் மதியம் 2:30 மணியளவில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு (RGGGH) கொண்டு செல்லப்பட்டார் எனவும், ஆனால் இரவு 7:00 மணியளவில் அவர் இறந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய கடலோர காவல்படையின் 25வது டைரக்டர் ஜெனரலாக பால் நியமிக்கப்பட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

பாதுகாப்பு அமைச்சர் இரங்கல்

தொழில் கண்ணோட்டம்

இந்தியக் கடலோரக் காவல்படையில் பாலின் புகழ்பெற்ற பயணம்

இந்திய கடற்படை அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு, ஜனவரி 1989இல் இந்திய கடலோர காவல்படையில் தனது சேவையை தொடங்கினார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது வாழ்க்கை முழுவதும், கடலோர காவல்படையின் தளபதி(வடமேற்கு) மற்றும் கடலோர காவல்படை தலைமையகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரல் உட்பட பல முக்கிய பதவிகளை பால் வகித்தார். டைரக்டர் ஜெனரலாக இருந்த காலத்தில், போதைப்பொருள் பறிமுதல், கடுமையான சூறாவளி புயல்களின் போது மீட்பு பணிகள், வெளிநாட்டு கடலோரக் காவலர்களுடன் கூட்டுப் பயிற்சிகள், வேட்டையாடுதல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை அவர் மேற்பார்வையிட்டார். அவரது விதிவிலக்கான சேவைக்காக, 2013 இல் தத்ரக்ஷக் பதக்கமும், 2018 இல் ஜனாதிபதியின் தத்ரக்ஷக் பதக்கமும் பாலுக்கு வழங்கப்பட்டது.