இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!
செய்தி முன்னோட்டம்
இந்திய-சீன எல்லையில் பதட்டம் குறையாத நிலையில், அக்னி 5 ஏவுகணை சோதனையை நேற்று இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இந்த ஏவுகணை 1500 கிலோ அணு ஆயுதங்களைத் சுமந்து செல்லும் ஒரு போர் ஆயுதமாகும்.
இதற்கு ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் வரைப் பாயும் சக்தி இருக்கிறது.
இது மணிக்கு 29,401 கிமீ வேகத்தில் செல்ல கூடிய திறன் கொண்டது. ஒரு நொடிக்கு 8.16 கிமீ வேகத்தில் இது பயணம் செய்யும்.
நேற்று, 5,500கிமீ தொலைவில் இருந்த இலக்கை மிக சரியாக தாக்கிய இந்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே களமிறக்கப்பட்ட அக்னி 1-4 வரை உள்ள ஏவுகணைகளால் 3000கிமீ வரை மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லை
இந்திய-சீன பிரச்சனை!
கடந்த 9 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் என்ற பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்.
இதைப் பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அத்துமீறி நுழைந்த 400 பேரை இந்திய வீரர்கள் 50 பேர் சேர்ந்து விரட்டி அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று நாடெங்கும் பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், அக்னி 5 ஏவுகணையைக் களமிறக்கி உலக நாடுகளை இந்தியா நடுநடுங்க வைத்திருக்கிறது.
5,500 கிமீ ரேடியஸ் அதாவது உலகில் உள்ள பாதி நாடுகள் வரை பாயும் திறன் இந்த ஏவுகணைக்கு உண்டு.
இதுவரை, அமெரிக்கா, சீனா, ரஷியா, வடகொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த அளவு சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருந்தன.