
இந்தியாவில் ஒரே நாளில் 7,178 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
நேற்று(ஏப்-23) 10,112ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 7,178ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 65,683ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.15 சதவீதமாகும்.
இதுவரை, இந்தியாவில் 4.48 கோடி(4,48,98,893) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,345 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 16 இறப்புகள் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 22ஆம் தேதி 10,112 பாதிப்புகளும், ஏப்ரல் 21ஆம் தேதி 11,692 பாதிப்புகளும், ஏப்ரல் 20ஆம் தேதி 12,591 பாதிப்புகளும், ஏப்ரல் 19ஆம் 10,542 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.
details
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,43,01,865 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 9,011 பேர் குணமடைந்துள்ளனர்.
தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 9.16 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 5.41 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.67 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 78,342 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை 220,66,39,736 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 208 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.