
தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாற்றம்
செய்தி முன்னோட்டம்
பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்ற இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
அந்த மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருந்ததால் அப்போதே பெயர் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், மாற்றப்படவில்லை.
இதற்கிடையில், உலக தலைவர்கள் கூடி இருந்த ஜி20 மாநாட்டின் அழைப்பிதழ்கள் மற்றும் பெயர் பலகைகளிலும் இந்தியாவிற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் 'இந்தியா' என்ற பெயருக்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், அந்த லோகோவில் "உடல்நலம் காக்கும்" இந்து கடவுளான தன்வந்திரியின் படமும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோ மாற்றம்
#NEWSUPDATE || தேசிய மருத்துவ ஆணைய இலச்சினையில் 'பாரத்'..! | #NationalMedicalCommission | #Bharat | #India | #PolimerNews pic.twitter.com/jTrOv1nWXZ
— Polimer News (@polimernews) November 27, 2023