இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி முதன்முதலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்திய தனியார் நிறுவனமான லார்சன் & டூப்ரோ(L&T), பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புடன்(DRDO) இணைந்து இந்த பீரங்கியை உருவாக்கியுள்ளது.
அனுமதி கிடைத்த 24 மாதங்களுக்குள் இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவின் அதிவேக தயாரிப்பு என்ற பெயர் இதற்கு கிடைத்துள்ளது.
ஆரம்ப சோதனைகளைத் தொடர்ந்து, 'ஜோராவார்," இல் சில மேம்படுத்தல்கள் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
அடுத்தபடியாக, இது இராணுவத்தின் உதவியுடன் பாலைவனத்தில் சோதனை செய்யப்பட உள்ளது. அதற்கு பிறகு, லடாக்கில் உள்ள உயரமான இடங்களில் வைத்தும் இது சோதனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியா
350 டாங்கிகளை வாங்க திட்டமிடும் இந்திய இராணுவம்
'ஜோராவார்' பீரங்கியானது இந்திய ராணுவத்தின் திட்டமான ஜோராவார் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது போர்க்களங்களில் உயரமான பகுதிகளில் விரைவாகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்ட்டுள்ளது.
மேலும், உள்நாட்டிலேயே இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி செய்லபடுத்தும் இராணுவ முயற்சியாகவும் இது கருத்தாடுகிறது.
இதற்கிடையில், ஏறத்தாழ 350 லைட் டாங்கிகளை(ஒவ்வொன்றும் அதிகபட்சம் 25 டன் எடையுள்ளவைகள்) ஒரு கட்டமாக வாங்குவதற்கு இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கிட்டத்தட்ட ஆறு படைப்பிரிவுகளை உருவாக்குவது இராணுவத்தின் திட்டமாகும்.
இந்த பீரங்கிகள் செயற்கை நுண்ணறிவு (AI), தந்திரோபாய கண்காணிப்பு ட்ரோன்கள், அலைந்து திரியும் வெடிமருந்துகள் மற்றும் செயலில் உள்ள பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.