Page Loader
இந்தியாவில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: நேற்றை விட பரவல் 20% அதிகரிப்பு
இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,33,719) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: நேற்றை விட பரவல் 20% அதிகரிப்பு

எழுதியவர் Sindhuja SM
Apr 06, 2023
11:42 am

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஏப்-5) 4,435ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 5,335ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,335 புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், நேற்றை விட கொரோனா பரவல் 20% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக தினசரி பாதிப்புகள் 5,000-ஐத் தாண்டியுள்ளது. நாட்டின் செயலில் உள்ள கொரோனா 25,587 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.06 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,33,719) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,929 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியா

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,82,538ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 2,826 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 3.32 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.79 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.75 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,60,742 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,18,366 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,993 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.