இந்தியாவில் ஒரே நாளில் 6,155 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-7) 6050ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 6,155ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் செயலில் உள்ள கொரோனா 31,194 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.07 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,51,259) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,954 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 11 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாநிலங்கள் அனைத்திலும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா ஒத்திகை பயிற்சி நடத்தபட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,89,111ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 3,253 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 5.63 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 3.47 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.75 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,09,378 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,22,663 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,963 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.