இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள்
நேற்று(ஏப்-6) 5,335ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 6050ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுகாதார அமைச்சர் இன்று உயர்மட்ட நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். நேற்றை விட கொரோனா எண்ணிக்கை 13% அதிகரித்து, நாட்டின் செயலில் உள்ள கொரோனா 28,303 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.06 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,45,104) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,943 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 14 இறப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில்-3, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில்- தலா 2, கேரளா, டெல்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில்- தலா 1 இறப்புகள் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,85,858ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 3,320 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 3.39 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 3.02 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.75 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,533 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,20,700 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,334 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.