
இந்தியாவில் வரலாறு காணாத அளவு குறைந்தது கொரோனா பாதிப்புகள்
செய்தி முன்னோட்டம்
நேற்று(அக் 21) 12ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 9ஆக பதிவாகியுள்ளது.
2020ஆம் ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட மிக குறைவான தினசரி பாதிப்புகள் இதுவாகும்.
மேலும், இன்று இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 245ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.
இதுவரை, இந்தியாவில் 4.49(4,50,01,061) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,291ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.
தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.
டக்ஜ்வ்ஜேபி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்
இந்தியாவில் அக்டோபர் 21ஆம் தேதி 22 பாதிப்புகளும் அக்டோபர் 20ஆம் தேதி 37 பாதிப்புகளும் அக்டோபர் 19ஆம் தேதி 48 பாதிப்புகளும் அக்டோபர் 16ஆம் தேதி 33 பாதிப்புகளும் அக்டோபர் 15ஆம் தேதி 27 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,67,525 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் இதுவரை பேர் 6,972,152 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, உலகளவில் 771,407,825 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 668,454,072 ஆக உயர்ந்துள்ளது.