புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா
செய்தி முன்னோட்டம்
இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிய உற்பத்தி தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் பல்வேறு வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு இந்திய மருந்துகளால் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இந்திய மருந்துகளுக்கு அவப்பெயர் உண்டாகியுள்ளது.
அந்த அவப்பெயரை களைந்து இந்தியாவின் 50 பில்லியன் டாலர் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள மருந்து தொழிற்சாலைகளை ஆய்வு செய்து உற்பத்தித் தரங்களை உயர்த்தும் பணியையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
கோலன்வ்
'மருந்துகளின் தரத்திற்கு உற்பத்தியாளர் பொறுப்பேற்க வேண்டும்'
"மருந்து தயாரிப்புகளின் தரத்திற்கு உற்பத்தியாளர் பொறுப்பேற்க வேண்டும், உரிமத்தின் தேவைகளுக்கு இணங்க, போதுமான பாதுகாப்பு, தரம் மாற்றும் செயல்திறன் மருந்துகளுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதை மீறுவதால் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது" என்று டிசம்பர் 28 தேதியிட்ட ஒரு அறிக்கையை மத்திய அரசுவெளியிட்டுள்ளது.
சோதனைகளின் மூலம் "திருப்திகரமான முடிவுகளை" மருந்துகள் பெற்ற பின்னரே நிறுவனங்கள் முடிக்கப்பட்ட தயாரிப்பை சந்தைப்படுத்த வேண்டும் என்றும், மருந்துகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை உடனடியாக அறிய முதற்கட்ட மற்றும் இறுதி தயாரிப்புகளை போதுமான அளவு வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.