LOADING...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயார்! ஹரியானாவில் சீறிப்பாயப்போகும் அதிவேக ரயில்; முழு விவரம்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயார்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயார்! ஹரியானாவில் சீறிப்பாயப்போகும் அதிவேக ரயில்; முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
08:16 pm

செய்தி முன்னோட்டம்

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை போக்குவரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் ஹரியானாவில் இயக்கப்படத் தயாராக உள்ளது. இந்த வாரம் ஜிந்த் ரயில் நிலையத்தில் இறுதி சோதனைகள் நடைபெறவுள்ளன. இந்த ரயில் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் நகரங்களுக்கு இடையே சுமார் 90 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் ஆகும். இது பயணிகளுக்கு வேகமான மற்றும் சொகுசான பயணத்தை உறுதி செய்யும். வரும் ஜனவரி 26 முதல் 2 டிரைவர் பவர் கார்கள் மற்றும் 8 பயணிகள் பெட்டிகளுடன் கூடிய அதிகாரப்பூர்வ சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.

தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்

ரயிலின் நவீன தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு

9 கிலோகிராம் தண்ணீரில் இருந்து 900 கிராம் ஹைட்ரஜன் தயாரிக்கப்படும். இந்த எரிபொருளைக் கொண்டு 1 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். ஸ்பெயினைச் சேர்ந்த நிறுவனத்தால் ஜிந்த் ரயில் நிலையத்தில் அதிநவீன ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் மற்றும் டிரைவர் பவர் கார்கள் சென்னையின் பெரம்பூர் ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். ரயிலில் ஏசி, விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் அனைத்தும் ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும். மெட்ரோ ரயில் போன்ற டிஜிட்டல் திரைகள் மற்றும் தானியங்கி கதவுகள் இதில் உள்ளன.

பசுமைப் புரட்சி

பசுமைப் புரட்சிக்கு வித்திடும் ஹைட்ரஜன் ரயில்கள்

ஹைட்ரஜன் ரயில்கள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாகத் தவிர்க்கின்றன. டீசல் ரயில்களுக்கு மாற்றாக அமையும் இத்திட்டம், இந்தியாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒரு பெரிய பாய்ச்சலாகும். பிரதமர் அலுவலகத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி இந்த ரயிலை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். ஜிந்த் நகரில் இந்தியாவின் மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைந்திருப்பது அந்தப் பகுதி மக்களுக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும் என ஹரியானா துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Advertisement