Page Loader
உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்பட்ட முறையில் தவறை கண்டறிந்த மத்திய அரசு
இந்த குறியீட்டில் இந்தியா(111), பாகிஸ்தானை(112) தவிர அனைத்து தெற்காசிய நாடுகளை விடவும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்பட்ட முறையில் தவறை கண்டறிந்த மத்திய அரசு

எழுதியவர் Srinath r
Oct 13, 2023
03:54 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில், 115 நாடுகளில், இந்தியா 111 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உலக பசிக் குறியீட்டில் இந்தியா,கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு(2023), 4 இடங்களில் பின்தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த குறியீட்டில் இந்தியாவிற்கு 28.7 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. இந்த குறியீட்டில் இந்தியா, தனது அண்டை நாடுகளான வங்கதேசம்(81), நேபால்(68) மற்றும் இலங்கையை(60) விட பின்தங்கி இருந்தது அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில் மத்திய அரசு இந்த குறியீடு, "தவறான அளவுகோலில் அளவிடப்பட்டதாக" கூறி உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கையை நிராகரித்தது. உலகளாவிய பசி குறியீடு கணக்கெடுப்பு, கன்சான் வேர்ல்ட் வைட் மற்றும் வேல்ட் ஹுங்கேர் ஹலைப் என்ற அரசு சாரா நிறுவனங்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

2nd card

தவறுகளை பட்டியலிடும் மத்திய அரசு

இந்த குறியீட்டில் உள்ள தவறுகளை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. உலகளாவிய பசி குறியீட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட குறிகாட்டிகளில்(Indicators) நான்கில் மூன்று, குழந்தைகளின் உடல் நலத்துடன் தொடர்பு உடையது எனவும், அதை வைத்து இந்தியாவின் ஒட்டுமொத்த பசி குறியீட்டை மதிப்பிட முடியாது எனக் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் நான்காவது மற்றும் மிக முக்கியமான குறிகாட்டியான 'ஊட்டச்சத்து குறைபாடு விகிதம்', வெறும் 3,000 நபர்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளதையும் மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது.

3rd card

இந்தியாவின் பதில்

மத்திய அமைச்சகம் அதன் அறிக்கையில், மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 (மிஷன் போஷன் 2.0) ஆகியவற்றின் கீழ் ஊட்டச்சத்து குறைபாட்டின் சவாலை எதிர்கொள்ள பல முக்கிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 'போஷன் ட்ராக்கர்' என்ற நிகழ்நேர ஊட்டச்சத்து மதிப்பீட்டு செயலியை கண்டுபிடித்து அதன் ஊடாக எடுக்கப்படும் தரவுகள் மூலம் ஊட்டச்சத்து தொடர்பான கொள்கைகள் வகுத்து வருகிறது. மேலும் மத்திய அரசு 'போஷன் ட்ராக்கர்' செயலி மூலம் மாதம் மாதம் எடுக்கப்பட்ட ஊட்டக்குறை(child wasting) 7.2% ஆக உள்ளதையும், உலக பசிக் குறியீட்டில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக 18.7% ஆக குறிப்பிடப்பட்டு மேற்கோள்காட்டி, உலக பசி குறியீட்டிற்கு பதில் அளித்துள்ளது.