'இந்தியா' கூட்டணி - 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு குறித்த அறிவிப்பு
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வின் வெற்றியினை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி தான் 'INDIA'. பாஜக தனது வெற்றிக்காக வியூகம் அமைத்து வரும் நிலையில், அவர்கள் வெற்றியினை முறியடிக்கும் முயற்சியில் 'INDIA' கூட்டணியினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று(செப்.,1) மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்த ஆலோசனை நடந்து வந்த நிலையில். தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'INDIA' கூட்டணிக்கான 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
13 பேர் கொண்ட குழுவின் விவரங்கள்
அதில், திமுக கட்சி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து, காங்கிரஸ் சார்பாக கே.சி.வேணுகோபால், ஆம் ஆத்மி சார்பாக ராகவ் சத்தா, எஸ்.பி., சார்பாக ஜாதவ் அலிகான், டிஎம்சி சார்பாக அபிஷேக் பானர்ஜி, என்பிசி சார்பாக சரத் பவார், சிவசேனா சார்பாக சஞ்சய் ராவத், ஆர்.ஜே.டி. சார்பாக தேஜஸ்வி யாதவ், ஜே.டி.யூ. சார்பாக லல்லன் சிங், ஜே.எம்.எம்.சார்பாக ஹேமந்த் சோரன், எஸ்.பி. டி.ராஜா, சி.பி.ஐ., உமர் அப்துல்லா, என்.சி.,மெகபூபா முப்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாஜக அரசுக்கு 'INDIA' என்னும் பெயரே பயத்தையும், காய்ச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.