கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
உலக சுகாதார தினமான இன்று(ஏப் 7), மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வாசுதேவ் குடும்பகம்' இந்தியாவின் பாரம்பரியம் என்றும், கோவிட்-19 தொற்றுநோயின் போது 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
"உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாசுதேவ் குடும்பகம் என்ற கருத்து நமது பாரம்பரியமாகும். இதன் மூலம் மோடி ஜி தலைமையிலான சுகாதார அமைச்சகம் தனது பொறுப்பை நிறைவேற்றி உள்ளது. கொரோனா காலத்தில், உலகம் முழுவதும் மருந்து தட்டுப்பாடு இருந்ததை கவனத்தில் கொண்டு, நம் நாடு 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை கிடைக்கச் செய்தது." என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற இருக்கும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
உலக சுகாதார தினத்தையொட்டி நடந்த பேரணியில் பங்கேற்பதற்காக மாண்டவியா டெல்லி விஜய் சவுக்கிற்கு இன்று சென்றிருந்தார்.
மருத்துவ ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் விஜய் சௌக்கில் இருந்து நிர்மான் பவன் வரை நடந்து சென்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,050 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் செயலில் உள்ள கொரோனாவின் எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா மிக வேகமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட நிபுணர் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.