இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை!
இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்து இருப்பதாக ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் என்ற பொருளாதார உரிமைகள் குழு டேவோஸ் நகரில் நடைப்பெற்று வரும் சர்வதேச பொருளாதார கூட்டத்தின் முதல் நாளில் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அவர்களின் அறிக்கையின்படி, இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 5% வரியை கட்டினாலே நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் கல்வியை வழங்க முடியும் என கூறுகிறது. அப்படி கவுதம் அதானிக்கு இப்படி ஒரு பிரத்யேக வரியை விதித்து இருந்தால் 1.79 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும், அதை வைத்து பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்திருக்க முடியும் என கூறியுள்ளனர்.
வரி விதித்தால் பல ஏழை குடும்பங்களை காப்பாற்ற முடியும்
இந்த அறிக்கைக்கு 'Survival of the Richest' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய பணக்காரர்கள் 2% வரியை விதித்தால் கூட ஊட்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவு, மருத்துவ சேவையை வழங்க முடியும். அதுவே 2.5% சொத்து வரி விதித்தால் நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்கலாம் முடியும். தற்போது, இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து 121 சதவீதம், அதாவது ரூ.3,608 கோடியாக அதிகரித்துள்ளது. 102 ஆக இருந்த பில்லினர்கள் 166 ஆக அதிகரித்துள்ளனர். டாப் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54.12 லட்சம் கோடியாக உள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்ஃபேம் இந்தியாவின் சிஇஓ அமிதாப் பெஹார் தெரிவிக்கையில், பணக்காரர்கள் மேலும் உயர்ந்து செல்கின்றனர் என கூறியுள்ளார்.