Page Loader
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம்
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம்

எழுதியவர் Nivetha P
Apr 14, 2023
07:09 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இன்றைய நிலவரப்படி தினசரி பாதிப்பு 11,000ஐ தாண்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி இனி சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உயர்நீதிமன்றம் என தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடானது வரும் 17ம் தேதி திங்கட்கிழமை முதல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தலைமை பதிவாளர் பி.தனபால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கொரோனா

அறிவுறுத்தல்களை குறிப்பிட்டு அறிக்கை வெளியீடு 

அந்த அறிக்கையில், வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனி மனித இடைவெளி பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், வழக்கு பட்டியலில் இல்லாத நிலையில் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்த்தல் போன்றவற்றையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும், நீதிமன்ற அறை வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர் வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.