வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது
தமிழ்நாடு மாநிலம், கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி வீட்டிற்கு வருமான வரி சோதனை அதிகாரிகள் கடந்த 26ம் தேதி சோதனை செய்ய சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களை தங்கள் பணியினை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி அதிகாரிகளின் அடையாள அட்டையினை கேட்டு திமுக'வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், திமுக வார்டு கவுன்சிலர்கள் லாரன்ஸ்(48), பூபதி(42), நிதிநிறுவன அதிபர் குணசேகரன் ஆகியோர் உள்பட 9 பேரினை கைது செய்த கரூர் காவல்துறை, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது
இதேபோல் ராயனூர் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் சோதனை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றுள்ளார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தகராறு செய்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனையடுத்து தங்கள் பணியினை மேற்கொள்ள ஒத்துழைப்பு தரவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளார்கள். அந்த புகாரின் அடிப்படையில் செல்வம் என்பவரை தாந்தோன்றிமலை காவல்துறை கைது செய்துள்ளது. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.