மே மாதம் TDS/TCS-க்கு வருமான வரி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான நாட்கள்!
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரியை தாக்கல் செய்வது மற்றும் அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பது நல்லது. மே மாதத்தில் TDS/TCS-க்கான காலக்கெடு குறித்த முக்கியமான நாட்கள் வருமான வரி இணையதளத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. அவை என்ன என்பதைப் பார்க்கலாம். மே 15, 2023: மார்ச் மாதத்தில் செக்ஷன் 194-IA, 194-IB, 194M, 194S (குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்) ஆகியவற்றின் கீழ் வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட்டதற்கான TDS சான்றிதழை வழங்குவதற்கான கடைசி நாளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மே 30, 2023: செக்ஷன் 194-IA, 194-IB, 194M, 194S ஆகியவற்றின் கீழ் TDS வரிப்பிடித்தம் செய்யப்பட்ட சலான்-கம்-ஸ்டேட்மென்டை வருமான வரித்துறையிடம் மின்னணு முறையில் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்.
டிசிஎஸ் (TCS):
மே 15, 2023: மார்ச் 31-ல் முடிவடைந்த நான்காம் காலாண்டில் TCS செலுத்தியதற்கான அறிக்கை சமர்ப்பிக்க கடைசி நாள். மே 30, 2023: கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்கான TCS சான்றிதழ் வழங்குவதற்கான கடைசி நாள். மே 31, 2023: மார்ச் 31-ல் முடிவடைந்த கடைசி காலாண்டில் TDS செலுத்தியதற்கான அறிக்கை சமர்ப்பிக்க கடைசி நாள்.