
பாட்னா ரயில் நிலைய டிவிகளில் 3 நிமிடங்களுக்கு ஒளிபரப்பப்பட்ட ஆபாச வீடியோ
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலம் பாட்னாவில் இருக்கும் ரயில் நிலையத்தில் உள்ள டிவிகளில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது ரயில்வே அதிகாரிகளை பெரும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
நேற்று(மார் 19) காலை 10 மணியளவில், பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள டிவிகள் அனைத்திலும் விளம்பரங்களுக்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.
அந்த ஆபாச காட்சிகள் சுமார் 3 நிமிடங்களுக்கு நிற்காமல் பொதுமக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருந்ததால். பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து காட்சிகளை நிறுத்தினர்.
ரயில் நிலையத்தில் விளம்பரங்களை ஒளிபரப்பும் தத்தா கம்யூனிகேஷன் என்ற ஏஜென்சிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ரயில்வே தடுப்புப்பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ
Passengers at Patna Railway Station faced an awkward situation as a Pornographic clip was played on all the 10 platforms for straight 3 minutes. Incident occured on Sunday night. pic.twitter.com/lkJAFmbFph
— Treeni (@_treeni) March 20, 2023