உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிதிபந்த் என்பவர் தனது ஆறு கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து குறைந்த வருமானம் மற்றும் காலநிலை மாற்றங்களால் வருமானம் ஈட்டமுடியாமல் தவிக்கும் பெண்கள் ஆகியோரை கொண்டு விவசாய இழப்புகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றி கெட்டுப்போன விளைபொருட்களை விற்பனை செய்ய உதவும் வகையிலான ஒரு வேளாண் தொழில்நுட்ப தொடக்கத்தை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் பெயர் S4S டெக்னாலஜி ஆகும். உலகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. ஆனால் ஒழுங்கமைக்கப்படாத விநியோக சங்கிலியால் 40%க்கும் மேலான விளைப்பொருட்கள் வீணடிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இத்தகைய சிக்கல்களை தீர்க்க, அவுரங்கபாத்தை சேர்ந்த ரசாயன பொறியாளர் நிதி பந்த் என்பவர் S4Sடெக்னாலஜி (சயின்ஸ் ஃபார் சொசைட்டி)என்னும் உணவு பதப்படுத்தும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரங்கள் கொண்டு விளைபொருட்கள் பதப்படுத்தல்
இதில் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களின் அதிகப்படியான உற்பத்தியை பிரித்தெடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. நிதி பந்த் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவராவார். நிதிபந்த் இதுகுறித்து பேசுகையில், உத்தரகாண்டில் அடிக்கடி மழை,வெள்ளம் ஏற்படும் காரணத்தினால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளை தொடர்ந்து நஷ்டத்தில் தள்ளும் என்றும் கூறியுள்ளார். இவர் துவங்கியுள்ள நிறுவனம் மூலம் விவசாய கழிவுப்பொருட்களை பதப்படுத்தி அதன்மூலம் விலைமதிக்கத்தக்க உணவு பொருட்களை தயார் செய்து வருகிறார்கள். அதன்படி, தக்காளி பவுடர், இஞ்சி துகள்கள், வெங்காய துகள்கள் போன்றவற்றை சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த இயந்திர உதவியால் பெண்கள் விளைபொருட்களை மதிக்கத்தக்கப்பொருளாக மாற்றுகிறார்கள். மேலும் இந்த பொருளில் உள்ள நறுமணம், நிறம், சத்துக்கள் 95%வரை அதிலேயே தக்கவைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.