Page Loader
கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து 3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் 
கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து 3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து 3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் 

எழுதியவர் Nivetha P
Nov 11, 2023
02:24 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகை நாளை(நவ.,12) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து மட்டும் கடந்த 2 நாட்களில் 3.66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்னும் நோக்கத்தில் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தென்மாவட்டங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆம்னி பேருந்துகள் அதிகளவில் கட்டணத்தினை வசூலிப்பதால் பலரும் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே முன்னதாக சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 2100 அரசு பேருந்துகளோடு 1,895 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

பண்டிகை 

2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் முன்பதிவு 

அதன்படி, சிறப்பு பேருந்துகளும் கடந்த 2 நாட்களாக இயக்கப்படுகிறது. மக்களும் இந்த சிறப்பு பேருந்துகள் சேவை காரணமாக சிரமம் இன்றி தங்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே தற்போது வந்துள்ள தகவல்படி, கடந்த 2 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் அடுத்து வரும் நாட்களில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் தங்கள் பயணத்திற்கான முன்பதிவினை செய்துள்ளனர் என்று தமிழக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்ள நூற்றுக்கணக்கானோர் கூடியதால் அப்பகுதி திருவிழா கோலம் பூண்டது.