தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் முடிந்து தற்போது பொது தேர்வு நடந்து வருகிறது.
அதனை தொடர்ந்து 10ம் வகுப்புக்கான பொது தேர்வு ஏப்ரல் 6ம் தேதி துவங்கவுள்ளது.
அதற்கு முன்னர் செய்முறை தேர்வினை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த மார்ச் 20ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வானது அந்தந்த பள்ளிகளில் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த கால அவகாசம் மார்ச்31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இந்த காலநீட்டிப்பின் காரணம் என்னவென்றால், தமிழகம் முழுவதும் செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை என் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தனிக்கவனம் செலுத்தவேண்டும்
மாணவர்கள் நலன் கருதி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட்டான விவகாரத்தை தொடர்ந்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதனையடுத்து செய்முறை தேர்வுக்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் நலன் கருதியே இந்த கால நீட்டிப்பு தற்போது செய்யப்பட்டுள்ளது என்று தேர்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்முறை தேர்விலேயே 25 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் என்றால், மொழி பாடங்களின் பொது தேர்வின் போதும் இது தொடரும் என்ற கருத்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.