தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வினை முன்னதாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அண்மையில் தான் பிளஸ் 2மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கியது. அதே போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த வகுப்பு பொது தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னரே, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மற்ற மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது.
பத்து நாட்களுக்கு முன்னதாக தேர்வுகள் நடத்த திட்டம்
இந்திய நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவரும் சூழலில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தமிழக பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவிருந்த 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான இந்தாண்டு இறுதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 27ம் தேதி துவங்கியிருந்த தேர்வுகளை பத்து நாட்களுக்கு முன்னதாக ஏப்ரல் 17ம் தேதி முதல் துவங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் சிறுவர்-சிறுமிகளையே அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.