NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்
    இந்தியா

    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்

    எழுதியவர் Nivetha P
    September 02, 2023 | 06:12 pm 0 நிமிட வாசிப்பு
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் என்னும் மாவட்டத்தில் 21 வயதுடைய பழங்குடியின பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா கூறியுள்ளதாவது, பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவரை விட்டுவிட்டு வேறொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்த உண்மையினை அறிந்த அந்த கணவன் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பெண்ணை கடத்தி தங்கள் தலியாவத் கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவரை அங்கு வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் 7 பேரை கைது செய்த காவல்துறை 

    மேலும், ஆத்திரம் தாங்காத அப்பெண்ணின் கணவரும், உறவினர்களும் அந்த பெண்ணை ஊரார் மத்தியில் வைத்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் இந்த கொடூர நிகழ்வை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறை அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட அப்பெண் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அப்பெண்ணின் கணவர் உள்பட 7 பேரினை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ராஜஸ்தான்
    காவல்துறை
    காவல்துறை

    ராஜஸ்தான்

    ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது? தற்கொலை
    கோவையில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய ராஜஸ்தான் நபர் கைது  கோவை
    ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள் நிலநடுக்கம்
    6 மாத குழந்தையுடன் அதன் குடும்பத்தையும் கொன்று எரித்த கொடூர சம்பவம்  இந்தியா

    காவல்துறை

    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023