வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட்
இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்த், முதன்முதலில் அதன் விமான தளத்தில் ஒரு விமானத்தை தரையிறக்கியதன் மூலம் வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம்(LCA) தேஜாஸின் கடற்படை பதிப்பு, கடல் சோதனையின் ஒரு பகுதியாக INS விக்ராந்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ரூ.20,000 கோடி செலவில் கட்டப்பட்ட 45,000 டன் எடை கொண்ட INS விக்ராந்த் கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தபட்டது. 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட INS விக்ராந்த், இந்தியாவில் கட்டப்பபடத்திலேயே மிகப்பெரிய போர்க்கப்பலாகும். இந்தியாவிலேயே கட்டப்பட்ட மிகப்பெரும் விமானமான இதன் மூலம், இந்தியா, ஆத்ம நிர்பார் பாரத்தின்(சுய-சார்பு இந்தியா) ஒரு பெரிய மைக்கல்லை அடைந்திருக்கிறது.