Page Loader
மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ
குஜராத்தில் மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ

மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ

எழுதியவர் Nivetha P
Feb 17, 2023
08:18 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் ஓர் சமூகத்தை சேர்ந்தவர்கள் புது மாப்பிள்ளைக்கு பான் மசாலா மற்றும் சிகரெட் கொடுத்து வரவேற்கும் வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், உறவினர்கள் மத்தியில் சோபாவில் அமர்ந்திருக்கும் மருமகனுக்கு அவரின் மாமியார் பற்றவைத்த சிகரெட்டை வாயில் கொண்டு வைக்கிறார். மாமனார் அந்த சிகரெட்டினை பற்ற வைப்பது போல் பாவனை செய்கிறார். பின்னர் அவரே மருமகன் வாயில் இருந்து அந்த சிகரெட்டை எடுத்துவிடுகிறார். இது தெற்கு குஜராத்தில் வாழும் சில மக்களின் பாரம்பரிய பழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ பதிவானது தற்போது இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram அஞ்சல்

குஜராத்தில் மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார்