LOADING...
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர் Nivetha P
Mar 04, 2023
03:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சென்னை மேடவாக்கம் கணபதி காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். மருத்துவ நிறுவனத்தில் பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.20 லட்சம் கடன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடன் வாங்கிய பணத்தினை அவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் வைத்து விளையாடியுள்ளார். இதற்கிடையே லோன் கொடுத்த ஆப்களில் இருந்து பணத்தினை கட்ட சொல்லி அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் சூதாட்டங்களில் வைத்து விளையாடிய பணமான ரூ.20 லட்சம் வரையிலான தொகையினையும் அவர் இழந்துள்ளார்.

ரூ.20 லட்சம் இழப்பு

வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வினோத் குமார்

ரூ.20 லட்ச பணத்தினையும் இழந்து லோன் கட்ட முடியாமல் வினோத் குமார் கடும் மனவுளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து வினோத் குமார் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது போன்ற சூதாட்டங்கள் மற்றும் ஆன்லைன் ஆப் மூலம் மக்களுக்கு ஆசை காண்பித்து கடன் வழங்கும் நிறுவனங்களால் தற்கொலைகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.