மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
"மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், அடுத்த சில நாட்களுக்கு, அதாவது 9 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை
தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், வெளியே செல்லும்போது உடன் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல வேண்டும். ஒஆர்எஸ் கரைசல் விட்டு அவ்வப்போது பருக வேண்டும்.
மேலும், இளநீர், தர்பூசணி, ஆரஞ்சு பழம், கிரேப்ஸ் போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களையும், சிட்ரஸ் பழங்களையும் அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கமாறும், இறுக்கமான உடைகள் அணிய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.