
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கத்திரி வெயில் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோடை வெயிலின் உக்கிரம் இப்போதே அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல நாளை முதல், 03ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 - 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
embed
வெப்பநிலை
#BREAKING || "தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்'' தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் நாளை முதல் 03ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 - 5 டிகிரி செல்சியஸ்... pic.twitter.com/2nLWJdFJ0X— Thanthi TV (@ThanthiTV) April 30, 2024