நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும்
உத்தரகாண்டின் நைனிடால் மற்றும் முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் ரூ.1,447 கோடி அல்லது ரூ.1,054 கோடி வரை சேதம் ஏற்படும் என்று ரூர்க்கியின் இந்திய தொழில்நுட்பக் கழகம்(IIT) நான்கு ஆண்டுகாலம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஐஐடி ரூர்க்கியின் நில அதிர்வு நிபுணரான யோகேந்திர சிங் கூறுகையில், ஜனவரி மாதம் முடிவடைந்த ஆய்வு, பாதிக்கப்படக்கூடிய மலை பிரதேசங்களின் நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வாகும். முசோரியில் உள்ள 5,101 கட்டிடங்கள் மற்றும் நைனிடாலில் உள்ள 7,793 கட்டிடங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட மென்பொருள் ஆய்வின் அடிப்படையில் "மலைப் பகுதிக்கான அடுத்த தலைமுறை நிலநடுக்க இழப்பை மதிப்பிடும் கருவி" என்ற தலைப்பில் இந்த கணக்கீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்டுமானம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய கண்டறிய வேண்டும்
"இரண்டு மலை பிரதேசங்களின் செயற்கைக்கோள் படங்களையும், 10% வீட்டுக் கட்டமைப்புகளின் தரை ஆய்வுகளையும் பயன்படுத்தி நாங்கள் கணக்கெடுப்பை நடத்தினோம். நாங்கள் உருவாக்கிய மென்பொருள் கட்டமைப்புகளின் கீழ் உள்ள பகுதியைக் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் அவற்றின் செலவைக் கணக்கிட்டோம்." என்று சிங் கூறியுள்ளார். முசோரியில் உள்ள உயரமான மலைகளில் கட்டிடங்கள் அமைந்துள்ளதாக சிங் கூறியுள்ளார். "... வீட்டுக் கட்டமைப்புகளின் எண்ணிக்கை நைனிடாலில் அதிகமாக உள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக இது முசோரியுடன் ஒப்பிடும்போது அதிக இழப்புகளைச் சந்திக்கும்." என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இரண்டு மலை பிரதேசங்களிலும் கட்டுமானம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய மிகவும் பாதிக்கப்படக்கூடிய சரிவுகளைக் கண்டறிய ஒரு ஆய்வுக்கு ஆணையிடுமாறு சிங் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.